LOADING

Type to search

இந்திய அரசியல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மருத்துவமனையில் அனுமதி!

Share

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நுரையீரல் தொற்று காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

     மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி. இவர் மாணவ பருவத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் மேற்கு வங்கத்தில் இருந்து மாநிலங்களவைக்கு பல ஆண்டுகள் எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தொடர்ந்து மூன்று முறை தேர்வு செய்யப்பட்டவர். இந்த சூழலில் சீதாராம் யெச்சூரி நுரையீரல் தொற்று காரணமாக நேற்று இரவு டில்லி எய்மஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு  மாற்றப்பட்டார். சீதாராம் யெச்சூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட உடனயே அவருக்கு மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகளை செய்தனர். அங்கு அவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்தது தெரியவந்ததால் உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், சீதாராம் யெச்சூரிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் மார்க்சிஸ்ட் கட்சி தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.