பிகில் படக்கதை விவகாரம் – இயக்குநர் அட்லீ பதில் அளிக்க உத்தரவு
Share
நடிகர் விஜய் நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான படம் பிகில். இதனை இயக்குநர் அட்லீ இயக்கி இருந்தார். இந்தப் படம் ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. பிகில் படத்தின் கதைக்கு உரிமை கோரி சென்னை சூளைமேட்டை சேர்ந்த அம்ஜத் மீரான் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். பிகில் படத்தின் கதையை தன்னுடையது என்றும், தனது கதையை பயன்படுத்தியதற்காக 10 லட்ச ரூபாய் வழங்க இயக்குனர் அட்லீ, ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோருக்கு உத்தரவிட வேண்டுமென வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நடிகர் விஜய் நடித்த பிகில் படக்கதை திருட்டு தொடர்பான வழக்கில் இயக்குநர் அட்லீ, தயாரிப்பாளர் அர்ச்சனா பதில் அளிக்க உத்தரவிட்டனர்.