Scarborough Agincourt மாகாண தொகுதியின் அங்கத்தவர் அரிஸ் பாபிகியன் நடத்திய கனடா தின ஒன்றுகூடல்
Scarborough Agincourt மாகாண அரசு தொகுதியின் அங்கத்தவர் அரிஸ் பாபிகியன் நடத்திய கனடா தின ஒன்றுகூடல் கடந்த 28-06-2026 அன்று ஞாயிற்றுக்கிழமை 133 Cass Avenue. Scarborough என்னும் விலாசத்தில் அமைந்துள்ள LYNNGATE PARK பூங்காவில் சிறப்பாக ஏற்பாடு செய்ய்பெற்றிருந்தது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும் நலன் விரும்பிகளும் அங்கு கலந்து கொண்டு அங்கு இடம்பெற்ற கலை நிகழ்ச்சிகள் மற்றும் உணவு உபசாரங்கள் ஆகியவற்றில் பங்கெடுத்தனர்.
பரதநாட்டியம் – சீனக் கலாச்சார நடனங்கள் மற்றும் ஏனைய இனங்கள் சார்ந்த கலாச்சார நிகழ்வுகள் மற்றும் உரைகள் ஆகியன இடம்பெற்றன.
அங்கு உரையாற்றிய Scarborough Agincourt மாகாண அரசு தொகுதியின் அங்கத்தவர் அரிஸ் பாபிகியன் அவர்கள் கனடா என்னும் அற்புதமான தேசத்தில் உலகின் பல பாகங்களிலும் பிறந்து வளர்ந்த பல்லின மக்கள் அவர்கள் சொந்த மொழியை பேசுபவர்களாக இருந்தாலும் இந்த நாட்டில் உயரத்தை எட்டக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன என்பதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும் என்றார். கனடாட உதயன் பிரதம ஆசிரியர் அவர்களும் தனது குழுவினரோடு அங்கு கலந்து கொண்டார்.