கனடா ஸ்காபுறோ- Villa Karuna Home for Seniors அமைப்பு நடத்திய Golden Super Singer Season 7 பாடல்போட்டியின் இறுதிச் சுற்றில் முதலிடம் பெற்ற குகதாசன் சோமசுந்தரம்

Share

கடந்த 27-09-2025 அன்று தமிழிசைக் கலாமன்ற மண்டபத்தில். கனடா ஸ்காபுறோ- Villa Karuna Home for Seniors அமைப்பு நடத்திய Golden Super Singer Season 7 பாடல்போட்டியின் இறுதிச் சுற்றில் ஸ்காபுறோவை வதிவிடமாகக் கொண்ட பாடகர் குகதாசன் சோமசுந்தரம் அவர்கள். முதலிடம் பெற்று வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார்.

Villa Karuna Home for Seniors அமைப்பின் நிறுவனரும் தலைவருமான இந்திராணி நாகேந்திரம் அவர்கள் தலைமையில் இந்த போட்டி நிகழ்ச்சி சிலமாதங்களாக தேர்வுப் போட்டிகள் நடைபெற்று பின்னர் இறுதிச் சுற்றுப் போட்டி 27ம் திகதி அன்றைய தினம் நடைபெற்து.

பல வர்த்தக அன்பர்களின் ஆதரவு மற்றும் தொண்டர்களாகவும் உதவியாளர்களாகவும் நடுவர்களாகவும் பயிற்றுவிப்பாளர்களாகவும் நண்பர்களாகவும் ஆதரவு வழங்கிய பலரது உள்ளார்ந்த வாழ்த்துக்கள் ஆகியவற்றோடு இந்த வருடாந்த போட்டி நிகழ்ச்சியை இந்திராணி நாகேந்திரம் அவர்கள் வெற்றிகரமான நடத்தி முடித்தார்.

இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பெற்ற ஐந்து போட்டியாளர்களில் அனைவரும் சிறப்பாக தங்கள் பாடல்களை நடுவர்கள் முன் சமர்ப்பித்தார்கள். இ றுதிச் சுற்றுப் போட்டியில் பங்குபற்றி முதலாம்-இரண்டாம் -மூன்றாம் இடங்களைத் தட்டிக் கொண்டவர்களுக்கும் மற்றும் ஏனைய இருவருக்கும் பணப்பரிசு மற்றும் விசேட கௌரவம் ஆகியன வழங்கப்பெற்றன.

நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மண்டபத்தை நிறைத்து அமர்ந்திருந்து பாடல்களை ரசித்தும் அமைதியாக இருந்தும் இறுதிச் சுற்றை வெற்றிகரமாக நிறைவு பெறச் செய்தார்கள். இறுதிச் சுற்றுப்போட்டியில் ஆதரவு வழங்கிய வர்த்தக அன்பர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் அதிபர்கள் மற்றும் பிரதம ஆசிரியர்கள் ஆகியோரும் மேடையில் கௌரவிக்கப்பெற்றனர்.

படமும் செய்திகளும்: சத்தியன்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>