Candidate for Toronto City Council-Ward 20-Scarborough Southwest, SHARMINA NASRIN’S Campaign Team hosted a Fundraising Event.

Share

ரொறன்ரோ நகரசபை -ஸ்காபுறோ தென்மேற்கு-20ம் வட்டாரத்திற்கான வேட்பாளர் சர்மினா நசீரின் பிரச்சாரக்குழு நடத்திய நிதிசேர் நிகழ்வு

மிக விரைவில் நடைபெறவுள்ளரொறன்ரோ நகரசபைக்கான தேர்தலில் -ஸ்காபுறோ தென்மேற்கு-20ம் வட்டாரத்திற்கான வேட்பாளராகப் போட்டியிடும் திருமதி சர்மினா நசீரின் பிரச்சாரக்குழு நடத்திய நிதிசேர் நிகழ்வு கடந்த 31-07-2026 வெள்ளிக்கிழமையன்று மாலை ஸ்காபுறோவில் நடைபெற்றது.

பல்வேறு இனங்கள் சார்ந்த வெவ்வேறு மொழிகள் பேசுவோர்களாக சுமார் 100 பார்வையாளர்களும் நன்கொடையாளர்களும் அங்கு கலந்து கொண்டார்கள். அங்கு தமிழ் பேசும் அன்பர்களான சமூக சேவையாளர் விசு கணபதிப்பிள்ளை, ‘யுகம்’ வானொலி கணபதி ரவீந்திரன், நகைக் கடை உரிமையாளர் சபாரத்தினம். ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் உட்பட சில தமிழ் பேசும் அன்பர்களும் கனடிய மற்றும் பங்காளதேஸ்- பாகிஸ்த்தான் ஆகிய இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் சபையை அலங்கரிததார்கள்.

வெவ்வேறு சமூகங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் சிலர் அங்கு உரைகளை ஆற்றினார்கள்.

நகரசபைத் தேரதலில் போட்டியிடும் (SHARMINA NASRIN) சர்மினா நசீரின் அங்கு உரையாற்றுகையில் தனது சமூகம் சார்ந்த மற்றும் குடும்பம் சார்ந்த சில சவால்களை தான் எதிர்கொண்ட நாட்களில் அவற்றிற்கான தீர்வைக் காணவேண்டும் என்ற ஆர்வத்தோடுதான் அரசியல் ஈடுபட வேண்டும் என்றும் தேர்தல்களில் போட்டியிடுவதன் மூலம் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று எண்ணி முதலில் சில சமூகப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினேன். அவ்வாறே எனது அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த பயணம் ஆரம்பித்தது என்று கூறினார்.

அன்றைய தினம் பல இளம் மாணவர்கள் வேட்பாளர் சர்மினா அவர்களின் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட தங்களை இணைத்துக் கொண்டார்கள். வேட்பாளர் சர்மினாவை வாழ்த்த விரும்புகின்றவர்கள் 437 228 8548 என்னும் இலக்கத்தை அழைக்கவும்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>