கொம்பியுடெக் கல்லூரியின் 2025ம் ஆண்டிற்கான தொழிற்பயிற்சி சான்றிதழ்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது
500க்கும் அதிகமான மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பெற்றன
கனடாவில் வெவ்வேறு துறைகளில் பயிற்சி நெறிகளையும் தொழில் அனுபவத்தையும் வழங்கும் வகையில் வெவ்வேறான துறைகளில் வழங்குவதில் முன்னணியில் திகழும் கொம்பியுடெக் கல்லூரி ( Computek College ) நடத்திய வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்கிழமையன்று 19ம் திகதி மாலை ஸ்காபுறோ கொன்வென்சன் விழா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சுமார் 500க்கும் அதிகமான மாணவ மாணவிகளுக்கு அன்றையை தினம் அவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் கற்றுத் தேர்ந்ததை உறுதிப் படுத்தும் முகமாக பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பெற்றன.
கொம்பியுடெக் கல்லூரி மற்றும் அதனோடு இணைந்து செயற்படும் நிறுவனஙகளின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான முரளி ஶ்ரீநாராயணதாஸ் அவர்கள் தலைமை தாங்கினார்.
அங்கு அவர் உரையாற்றும் போது. கனடாவில் இன்றைய தினம் தாங்கள் விரும்பிய துறைகளில் வகுப்பறைக் கல்வயையும் பயிற்சியையும் பெற்றுக் கொண்ட 500க்கும் அதிகமானவர்களின் பயிற்சிக் கட்டணங்களை மத்திய அரசும் மாகாண அரசும் கொம்பியுடெக் கல்லூரியின் நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளன. எனவே தகுதியுள்ளவர்கள் எமது கல்லூரியில் இணைந்து தொழில்வாய்ப்புக்களை இலகுவாகபெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்களை நன்கு பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ரொறன்ரோ பிராந்தியத்தில் மூன்று கிளைக் கல்வி நிறுவனங்களை நடத்தி அவற்றில் வர்த்தகம்-உடல்நலம்- மறறும் தொழில்நுட்பம் (Business, Healthcare, and Technology )ஆகிய துறைகளில் பயிற்சி நெறிகளை நடத்தி தற்போது பலருக்கு வேலை வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற மேற்படி தொழிற்பயிற்சி சான்றிதழ்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. அதில் கலந்து கொள்ளும் வகையில் பல தொழில் வழங்குவோர் மற்றும் சமூகு நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிச் சான்றிதழ்கள் பெற்ற அனைவரையும் வாழ்த்தினர்.
‘