Disciple of Guru Rajanie Selvapragasam, Reshali Ramesh’s Bharathanatya Arangetram was a long artistic work comprising dance pieces presented with great dedication!.

Share

நடனச் செல்வி றெசாலி ரமேஷின் பரதநாட்டிய அரங்கேற்றம் அர்ப்பணிப்புடன் சமர்ப்பிக்கப் பெற்ற நடன உருப்படிகள் மற்றும் நீண்ட ஒரு கலைப்படைப்பாகவும் திகழ்ந்தது!-

‘அபிநயாலயா நாட்டியாலயம்’ பரதக் கல்லூரியின் ஆசிரியை ரஜனி செல்வப்பிரகாசம் அவர்களின் மாணவியும் ரமேஷ் ரட்ணசிங்கம்- ரவீணா ரட்ணசிங்கம் தம்பதியின் புதல்வியுமான நடனச் செல்வி றெசாலி ரமேஷ் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றமானது கடந்த 15-08-2026 அன்று கனடாவின் ஒசாவா நகரில் நடைபெற்றது.

அன்றையதினம் நடனச் செல்வி றெசாலி ரமேஷ் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றத்தை அமைதியாக இருந்து ரசித்து அனுபவித்த போது அது. அர்ப்பணிப்புடன் சமர்ப்பணம் செய்யப்பெற்ற நடன உருப்படிகள் அடங்கிய நீண்ட ஒரு கலைப்படைப்பாகத் திகழ்தது என்றால் மிகையாகாது.

குருவின் திறமை மற்றும் நடன நங்கையின் அர்ப்பணிப்பு மற்றும் அவதானிப்பு ஆகியவை நீண்ட காலப் பயிற்சியின் பின்னர் அரங்கேற்றம என்ற மேடைக்கு எடுத்துவரப்பட்டபோது, பக்கவாத்தியக் கலைஞர்களின் அபாரத்திறமை மற்றும் இசையும் நடனமும் இணைந்த ஒரு ‘கூட்டு கலைப்படைப்பாக’ சில மணி நேரங்களுக்கு சபையினருக்கு ஒது இதமான கலை அனுபவமாகவும் அமைந்திருக்கலாம் என்ற நம்பிக்கை எமக்குத் தோன்றியது.

அன்றைய தினம் மண்டபம் நிறைந்த கலா ரசிகர்கள் மற்றும் நடன-சங்கீத ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள், கலைஞர்கள் என பன்முக ஆற்றல் கொண்டவர்களின் முன்பாக தனது அற்புதமான அரங்கேற்றத்தை மிகவும் நேர்த்தியாகவும் அவதானமாகவும் உயர்ந்த தரத்தில் வழங்கியநடனச் செல்வி றெசாலி ரமேஷ் அவர்களை எத்தனை தடவைகள் என்றாலும் பாராட்டலாம் என்ற உணர்வை அனைவருக்கும் தந்திருக்க வேண்டும் என்பதும் உறுதியான ஒரு பார்வையே ஆகும்.!

அரங்கேற்றத்தை முழுமையாக தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார் பேராசிரியர் ஆர். சுதர்சன் அவர்கள் .ஆழமான ஒரு கலைசார்ந்த வாழ்த்துரையை வழங்கிச் சென்றார் பிரதம விருந்தினர் திருமதி சுனிற்றா பிரகாஸ்.

தனது பாடசாலைக் கல்வியிலும் , தொண்டுப் பணியிலும் பின்னர் உயர் கல்வியிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் பெற்றோரின் ஒத்துழைப்புடன் முன்னேறிய நடனச் செல்வி றெசாலி ரமேஷ் அவர்கள் தனது கலைப் பயணத்திலும் ஆடல்வல்லானின் ஆசியைப் பெற்றும் மேலும் முன்னேற்றங்களைக் கண்டு தனது பெற்றோருக்கும் குருவிற்கும் எமது கனடிய தமிழ்ச் சமூகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துகின்றோம்.!

பார்வை:- ‘உதயன்’ சத்தியன்-

படங்கள்: ‘தமிழ்மிறர்’ சார்ள்ஸ்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>