விஜயா யுவல்லறி நிறுவனம் நடத்திய அதிஸ்டக் குலுக்கலில் வெற்றிபெற்ற இருவருக்கு பரிசாக வழங்கிய இரண்டு தங்கச் சங்கிலிகள்
கடந்த 31-08-2025 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஸ்காபுறோவில் அமைந்துள்ள சீனக் கலாச்சார மண்டபத்தில் GOLDENBELL PRODUCTIONS ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற GALA DANCE-2025ல் கலந்து சிறப்பித்த பிரபல நடனக் கலைஞர் SANDY MASTER கனடாவில் இயங்கிவரும் திரைஇசை மற்றும் மேல்நாட்டு நடனங்களை கற்றுத் தரும் நடனப் பாடசாலைகளையும் இங்கு அதனைப் பயின்று வரும் மாணவ மாணவிகளையும் மற்றும் பெற்றோரையும் பாராட்டினார்.
அத்துடன் இத்தனை சிறப்பாக அன்றை நடனப் போட்டி நிகழ்ச்சிகளையும் நடத்திய GOLDENBELL PRODUCTIONS நிறுவனத்தையும் மற்றும் நடன ஆசிரியையும் நடனக் கலைஞருமான சிந்தியா அவர்களையும் பாராட்டினார்.
அன்று காலை 10.00 மணி தொடக்கம் நடைபெற்ற நடனப் போட்டிகளில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தார்கள் என்பது முக்கியமானது.
இந்த போட்டி நிகழ்ச்சியில் முக்கிய விடயம் எதுவெனில். கனடாவில் இயங்கிவரும் பல நடனம் பயிற்றுவிக்கும் நிறுவனங்கள் இந்த போட்டிகளுக்கு தங்கள் மாணவ மாணவிகளை ஏற்பாடு செய்து ஓத்துழைத்தமையே என்றால் அது மிகையாகாது.
அன்றைய நடனப் போட்டிகளில் ஸ்காபுறோவில் இயங்கிவரும் கே2பி நடனக் கல்லூரி சிரேஸ்ட பிரிவில் முதலிடத்தைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும். அன்றைய தினம் விஜயா யுவல்லறி நிறுவனம் நடத்திய அதிஸ்டக் குலுக்கலில் வெற்றிபெற்ற இருவருக்கு பரிசாக வழங்கிய இரண்டு தங்கச் சங்கிலிகளை விஜய யுவல்லறி நிறுவன அதிபர் ரூபன் அவர்கள் வெற்றியாளர்களுக்கு வழங்கினார். அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக தயாரிக்கப்பெற்ற பாராட்டுப் பத்திரங்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் அவர்கள் வழங்கினார்கள்.
செய்தியும் படங்களும்:- சத்தியன்