சர்வதேச மருத்துவம் மற்றும் சுகாதார அமைப்பிற்கு நிதி வழங்கும் கொடையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு!
International Medical and Health Orgnization என்று அழைக்கப்பெறும்
சர்வதேச மருத்துவம் மற்றும் சுகாதார அமைப்பிற்கு நிதி வழங்கும் கொடையாளர்களை கௌரவிக்கும் மற்றும் அவர்களுக்கு அமைப்பின் பணிகளை பற்றிய விபரங்களை எடுத்துரைக்கும் நிகழ்வு கடந்த7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று மார்க்கம் நகரில் உள்ள கனடிய தமிழர் வர்த்தக சம்மேளன கேட்போர் கூடத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது.
மக்கள் மத்தியில் நன்கு அறியப்பெற்றவரான வைத்திய கலாநிதி வரகுணன் மகாதேவன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் அமைப்பின் வளர்ச்சியிலும் நிர்வாகத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் பல அன்பர்கள் வைத்திய கலாநிதிகள் என ஆர்வத்துடன் கலந்து கொண்டவர்கள் அமைதியாக அமர்ந்திருந்து நிகழ்வில் பங்கெடுத்தனர். அங்கு உரையாற்றிய ஏனைய உ ரையாளர்கள் பயனுள்ள வகையில் தமது உரைகளை ஆற்றினார்கள். கலந்து கொண்டோர் பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்து உரையாற்ற மேற்படி நிகழ்வு பயனுள்ள ஒன்றாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.