மார்க்கம் நகரத்தில் இயங்கிவரும் Green Borough Seniors Wellness Club மூத்தோர் அமைப்பு தனது 10வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது
மார்க்கம் நகரத்தில் திருமதி செல்வா அருள்ராஜசிங்கம் அவர்கள் தலைமையில் வெற்றிகரமாக இயங்கிவரும் Green Borough Seniors Wellness Club மூத்தோர் அமைப்பு தனது 10வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சிறப்பான ஒரு நிகழ்வை கடந்த 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று மார்க்கம் நகரத்தில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் நடத்தியது.
அழைக்கப்பெற்ற அரசியல் பிரதிநிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் யுனிற்றா நாதன்-மாகாண பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி மற்றும் மாநகரசபை உறுப்பினர் நீதன் சண்முகராஜா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரைகளை வழங்கினர். பிரதம விருந்தினராக அழைக்கப்பெற்றிருந்த எழுத்தாளரும் வைத்திய கலாநிதியுமான போல் ஜோசப் அவர்கள் அங்கு கூடியிருந்த சபையோருக்கு பயனுள்ள கருத்துக்ளை எடுத்துரைத்து விடைபெற்றார்.
இந்த Green Borough Seniors Wellness Club மூத்தோர் அமைப்பின் உறுப்பினர்களான ஆண்களும் பெண்களுமாக வழங்கிய கலை நிகழ்ச்சிகள் சபையோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தின.
Green Borough Seniors Wellness Club மூத்தோர் அமைப்பின் தலைவி திருமதி செல்வா அருள்ராஜசிங்கம் அவர்களை கௌரவிக்கும் வகையில் அமைப்பின் நிர்வாக சபையினரும் அங்கத்தவர்களும் தொண்டர்களும் பாராட்டுக் கேடயம் மற்றும் மாலை ஆகியவற்றை வழங்கி அவரது பணிகளைப் பாராட்டி உரையாற்றினார்கள்.
ஒரு நிறைவான வெற்றிவிழாவைக் கண்டு களித்த மகிழ்ச்சியோடு அனைவரும் இராப்போசன விருந்தருந்தி இல்லம் ஏகினர்.