வைத்திய கலாநிதி செந்தில் எஸ் மோகன் நிர்வாகத்தில் இயங்கும் ‘MEDICENTRE HEALTH’ வைத்திய நிலையம் Hilton Tornto / Markham Suites. இல் தனது விருது விழாவை நடத்தியது
கனடா- ஸ்காபுறோ நகரில் வைத்திய கலாநிதி செந்தில் எஸ் மோகன் அவர்களது நிர்வாகத்தில் இயங்கும் ‘MEDICENTRE HEALTH’ வைத்திய நிலையம் ஐந்து நட்சத்திர ஹோட்டலான Hilton Tornto / Markham Suites. இல் நட த்திய தனது வருடாந்த விருது வழங்கும் விழாவை அழகுற ஏற்பாடு செய்திருந்தது.
அது மாத்திரமல்ல வைத்திய கலாநிதிகளான முக்கிய சிறப்பு விருந்தினர்களையும் அமெரிக்காவிலிருந்து அழைத்து கௌரவித்தது. அத்துடன் ஒன்றாரியோ மாகாண அமைச்சர் றேமன்ட் சோ அவர்களை பிரதம விருந்தினராக அழைத்து அவரது பாராட்டுக்களையும் வாழ்த்துக்க்ளையும் பெற்று அன்றைய விழாவை வெற்றிகரமாக நடத்தியது.
மேற்படி விருது வழங்கும் விழாவில் வைத்திய சிகிச்சை நிலையத்தில் வைத்தியர்களாகவும் தாதிகளாகவும் மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்ளும் பயிற்றப்பெற்றவர்களாக உதவியாளர்களாகவும் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களாகவும் விளங்கும் பலர் கௌரவிக்கப்பெற்றனர்.
அவர்களுக்கு வைத்திய கலாநிதி மோகன் எஸ் செந்தில் அவர்களும் அன்றைய பிரதம விருந்தினர் அமைச்சர் றேமன்ட் சோ அவர்களும் அமெரிக்காவிலிருந்து பயணித்து சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட வைத்திய கலாநிதிகள் ஜோசப் அஞ்சலோ மற்றும் ஹர்சன் ஜெயதிலக்க ஆகியோரும் விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கிக் கௌரவித்தனர்.
அன்றைய தினம் ஊடகத்துறை சார்ந்த பல அன்பர்களையும் அழைத்து அவர்களை தகுந்த முறையில் உபசரித்து அனுப்ப வைத்திய கலாநிதி செந்தில் எஸ். மோகன் தவறவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
— தகவல்: சத்தியன்