Violinist Jeyathevan Nair’s ‘SARIGA’ Music, Arts, Creations, celebrated 25th year of their Cultural Instituion!
கடந்த 04- 10-2026 அன்று ஞாயிற்றுக்கிழமை அன்று கனடா கந்தசுவாமி கோவில் மண்டபத்தில் ஆலயத்தின் அறங்காவல் சபைத் தலைவர் திரு சுப்பிரமணியம் முத்துராஜலிங்கம் தலைமையில் நடைபெற்ற மேற்படி நூல்வெளியீட்டு விழாவில் சமஸ்கிரதம் மற்றும் தமிழ் மொழியில் எழுதப்பெற்றதும் சிவாச்சாரியப் பெருமக்களுக்கு பயனுள்ளதுமான ‘சகல தேவதா மஹோத்ஸவப பத்ததி’ என்னும் தொகுப்பு நூலும் மற்றும் வரலாற்று தொகுப்பு நூலான ‘’கிழக்கிலங்கை ஆதிசைவ சிவப்பிராமணர் வரலாறு’ என்னும் நூலும் வெளியிடப்பெறவுள்ளன. கனடாவில் இவ்வாறான ஒரு சைவமும் தமிழும் சிவ வழிபாடும் இவற்றோடு தங்கள் வாழக்கையை அர்ப்பணிக்கும் சிவாச்சாரியப் பெருமக்கள் சங்கமிக்கும் ஒரு அறிவு சார்ந்த விழாவாக மேற்படி பயனுள்ள விழா இடம்பெற்றது அத்துடன். இங்கு சிறப்பாக அழைக்கப்பட்டுள்ள உரையாளர்கள் சிவஶ்ரீ எம்.ஐ. யோகச் சந்திரசர்மா அவர்கள், அவர்கள்.. சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் அவர்கள் ,கனடா கந்தசுவாமி ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ கிருஸ்ண பங்குசக் குருக்கள் , ‘கலாபூஷணம் சிவஶ்ரீ; சிவானந்த சர்மா அவர்கள்,மற்றும் ரொறன்ரோ திருச்செந்தூர் ஆலய குரு சிவஶ்ரீ;. இ.நீதிராஜா குருக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். உதயன் பிரதம ஆசிரியரும் அங்கு வாழ்த்துரை வழங்கினார் அங்கு சிறப்புரையாற்றிய ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய பிரதம குருக்கள் சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக்குருக்கள் தனது உரையில் விழாவானது கனடா வாழ் சிவாச்சாரிய சமூகம், அதற்குள் அடங்கும் சைவ ஆகமத்தைக் நேர்த்தியாக் கற்றுத் தேர்ந்த சிவாச்சாரிய பெருமக்கள் அவர்தம் குடும்பத்தினர் ஒன்றாக் கூடி இறையருளை பக்தியுடன் அனுபவிக்கும் ஒரு மாலையாகவும் நான் உணர்கின்றேன். இன்று இங்கு வெளியிடப்பெறவுள்ள ஒரு நூலான ‘சகல தேவதா மஹோத்ஸவப பத்ததி’ என்னும் தொகுப்பு நூலான எம் போன்ற சிவாச்சாரியர்கள் அன்றாடம் எமது பணிகளோடு கடந்து செல்லும் சந்தர்ப்பங்கள் மற்றும் எமது கடமைகள் ஆகியவற்றுக்கும் உற்ற ஒரு துணை நூலக அமைந்த ஒன்றாகும். எனவே இங்கு வெளியிடப்பெறும் இந்த நூலில் அடங்கியுள்ள பயனுள்ள பல விடயங்கள் எமக்கு பல வழிகளிலும் உதவுகின்றவையாகவும் எம் பணிகளோடு எப்பொழுதும உடனிருக்கும் ஒன்றாகவும் நான் எண்ணி மகிழ்கின்றேன். இரண்டாவது வரலாற்று தொகுப்பு நூலான ‘’கிழக்கிலங்கை ஆதிசைவ சிவப்பிராமணர் வரலாறு’ என்னும் நூலும் எமக்கு வழிகாட்டிகளாக விளங்கும் சிவாச்சாரியப் பெருமக்களின் வாழ்க்கை மற்றும் அவர்கள் கற்றுக்கொண்டவை, சைவமும் தமிழும் சிவழிபாடும் தழைத்தோங்க அவர்கள் அர்ப்பணித்த வாழ்க்கை தொடர்பான விடயங்கள்ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையும் என்று நான் எதிர்பார்க்கின்றேன். அந்த வகையில் அதையும் பெற்று மகிழ நான் மிகுந்த ஆவலாக உள்ளேன் என்பதை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்” என்றார். மேற்படி வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட வர்கள் மேடைக்கு அழைக்கப்பெற்று நூல் பிரதிகளைப் பெற்றுக்கொண்டார்கள்
கனடா -ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள பொங்கு தமிழ்-2024 – தமிழர் எழுச்சி விழா
Sam Daniel
August 16, 2024
எமது தாயகத்தின் சர்வதேச ஓட்ட வீராங்கனை முள்ளியவளையைச் சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி ஶ்ரீஅனந்தசயனனை கௌரவித்த மார்க்கம் Boxgrove Seniors Community Wellness Club அமைப்பினர்
Sam Daniel
August 16, 2024
அனைவராலும் பாராட்டப்பெற்ற விழாவாக கனடாவில் நடைபெற்ற ‘வென்மேரி சர்வதேச விருதுகள்’ வழங்கும் விழா
Sam Daniel
August 16, 2024
...
1
…
3,322
3,323
3,324
3,325
3,326
…
4,869
Next »