Sharmina Nasrin, a Community Advocate and Public Policy Professional seeks the ‘Ontario Liberal’ Nomination for Scarborough Southwest.

Share

Scarborough Southwest. தொகுதியின் மாகாண தேர்தலில் போட்டியிடும் ‘ஒன்றாரியோ லிபரல் ‘ வேட்பாளர் Sharmina Nasrin, அவர்கள் கனடா கந்தசாமி ஆலய விசேட பூசையில் கலந்து கொண்டார்


Scarborough Southwest. தொகுதியின் மாகாண பாராளுமன்றத் உறுப்பினர் என்டிபி கட்சியைச் சேர்ந்த டொலி பேகம் அவர்கள் பதவியை இராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் போட்டியிடவுள்ள ‘ஒன்றாரியோ லிபரல் கட்சி’ வேட்பாளருக்கான தெரிவிற்காக முன்வந்திருக்கும் Sharmina Nasrin, அவர்கள் ஸ்காபுறோவில் பேர்ச்மவுண்ட் வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆலயமான கனடா கந்தசாமி கோவிலில் ல் நடைபெற்ற விசேட பூசையில் கலந்து கொண்டார்.

அங்கு Sharmina Nasrin அவர்கள் தனது தேர்தல் பிரச்சாரக் குழுவினரோடு சென்ற போது ஆலய பரிபாலன சபையின் தலைவர் முத்துராஜலிங்கம் (முத்து) அவர்கள் ஆலய பிரதம குருக்கள் மற்றும் உதவியாளர்கள் சகிதம் வரவேற்று உரையாற்றினார்.

அவர் அங்கு உரையாற்றுகையில் ” கனடாவில் ஒரு தொகுதியில் மத்திய- மாகாண மற்றும் உள்ளாட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள். அவர்கள் அனைவரினதும் சேவைகள் பொதுமக்களுக்கு மாத்திரமல்ல எமது ஆலயத்தைப் போன்ற பொது நிறுவனங்களுக்கும் அவசியமானவை. எமது ஆலயம் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வேளையில் மேற்படி மத்திய- மாகாண மற்றும் உள்ளாட்சி மன்றங்களின் தெரிவு செய்யப்பெற்ற மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் ஆதரவும் உதவியும் தேவையாக இருந்தன. எனவே இன்று எமது ஆலயத்திற்கு பக்தர்களைச் சந்திக்க வந்துள்ள Sharmina Nasrin அவர்களை நான் எமது ஆலயத்தின் சார்பில் எமது பக்தர்களுக்கு அறிமுகம் செய்து அன்னாரை Scarborough Southwest. தொகுதியின் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களிலும் எமது ஆதரவை வழங்கவேண்டும் என்று அன்பாகக் கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.

மேற்படிவைபவத்திற்கு ‘உதயன்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்களும் அழைக்கப்பெற்றிருந்தார்.

வேட்பாளரைத் தெரிவு செய்யும் தேர்தல் முதலாவதாக நடைபெறவுள்ளது. எனவே Scarborough Southwest. தொகுதிக்கான இடைத்தேர்தல் திகதி அறிவிக்கப்பெற்றவுடன் தமிழ் மக்கள் திறமையான வேட்பாளராக விளங்கும் Sharmina Nasrin அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அங்கு கலந்து கொண்ட பலர் தங்கள் ஆதரவை வழங்குவதாக உறுதியாகத் தெரிவித்தார்கள்.

அங்கு நன்றி தெரிவித்து உரையாற்றிய Sharmina Nasrin அவர்கள் தமிழ் மக்களின் அர்ப்பணிப்பு இந்த தேசத்திற்கும் நாம் வாழும் ஒன்றாரியோ மாகாணத்திற்கும் எவ்வளவு கிட்டியுள்ளது என்பதையும் தமிழ் மக்களின் வெற்றிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றைப் பற்றி நான் நன்கு அறிந்து வைத்துள்ளேன் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>