“அதிரடி” திரைப்படம் ஜூன் 19ம் தேதி ஒடிடி தளத்தில் வெளியாகிறது

Share

பாசில் ஜோசப், டொவினோ தாமஸ் நடித்துள்ள ‘அதிரடி’ படம் சோனி லைவ் ஓடிடியில் ஜூன் 19ம் தேதி வெளியாகவுள்ளது. பாசில் ஜோசப், டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்துள்ள ‘அதிரடி’ படத்தை அருண் அனிருத்தன் இயக்கியுள்ளார். அருண் அனிருத்தன் ‘மின்னல் முரளி’ திரைப்படத்தின் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். அனந்து, சமீர் உடன் இணைந்து பாசில் ஜோசப் மற்றும் டொவினோ தாமஸ் தயாரித்துள்ளனர். மலையாளத்தில் பிரபல நடிகர்களாக இருக்கும் பாசில் ஜோசப், டோவினா தாமஸ், இயக்குநர் வினித் ஸ்ரீனிவாசன் நடிப்பதால் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். கல்லூரி பின்னணியில் உருவான இதில் நாயகனாக பாசில் ஜோசப் நடிக்க, வில்லனாக டொவினோ நடித்துள்ளார். மே 13ம் தேதி இப்படம் வெளியானது. திரையரங்குகளில் வெளியான ‘அதிரடி’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக ரூ. 65 கோடி வசூலித்துள்ளது. மே 22 ஆம் தேதி தமிழிலும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், ‘அதிரடி’ படம் சோனி லைவ் ஓடிடியில் வரும் ஜூன் 19ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>