அமெரிக்காவின் மிசோரி மாகாணம் பேட்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் வானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்யும் ஸ்கை டைவிங் வீரர்கள் 11 பேர் உள்பட மொத்தம் 12 பேர் பயணித்தனர். இந்நிலையில், விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு வானில் பறந்துகொண்டிருந்த விமானம் சில நிமிடங்களில் அப்பகுதியில் உள்ள சாலை அருகே தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த விமானி உள்பட 12 பேரும் உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>