போர் முடிவுக்கு வரும் ..! ஹார்முஸ் நீரிணையை கடக்கும் கப்பல்களால் எரிபொருள் தட்டுப்பாடு நீங்குகிறது

Share

ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டதால் உலக நாடுகளுக்கு விரைவில் எரிபொருள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கில் கடந்த சில மாதங்களாக பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்த தாக்குதலில் முக்கிய அரசியல் தலைவர்கள், இரு தரப்பு வீரர்கள், அப்பாவி பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவுடனான மோதலை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. அதேவேளை, ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முடக்கியது. இதனால் ஈரானுக்கு சரக்கு, கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்வது பாதிக்கப்பட்டது. பல்வேறு நாடுகளின் கூட்டு முயற்சியால் அமெரிக்கா – ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. பின்னர், இரு நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்நிலையில், பேச்சுவார்த்தையில் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அமெரிக்கா, ஈரான் அறிவித்துள்ளது. இதன் மூலம் கடந்த சில மாதங்களாக அமெரிக்கா, ஈரான் இடையே நிலவி வந்த மோதல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கு ஹார்முஸ் நீரிணை சுங்கக்கட்டணம் இன்றி திறக்கப்படும் என்று ஈரானும், ஈரானின் துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ள அமெரிக்க படைகள் உடனடியாக திரும்பபெறப்படும் என்றும் அமெரிக்காவும் அறிவித்துள்ளன. அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதால், ஹார்முஸ் நீரிணை கட்டணமின்றி திறக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”ஈரானுடனான ஒப்பந்தம் இப்போது நிறைவடைந்துவிட்டது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்! ஹார்முஸ் நீரிணையை கட்டணமின்றி திறக்க நான் இதன்மூலம் முழுமையாக அங்கீகரிக்கிறேன். அதே நேரத்தில், அமெரிக்க கடற்படை முற்றுகையை உடனடியாக நீக்கவும் அங்கீகரிக்கிறேன். உலகக் கப்பல்களே, ஹார்முஸ் நீரிணையை கடக்க தயாராகுங்கள். எண்ணெய் தடையின்றி பாயட்டும்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>