அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. இதில் அமெரிக்கா- ஈரான் இடையே போர் மூண்டது. ஒரு மாதத்திற்கு மேலாக இந்த போர் நீடித்தது. கடந்த 7-ந்தேதி இரண்டு வார இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த போரில் ஈரானில் 3375 உயிரிழந்ததாக ஈரானின் சட்டப்பூர்வ மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் தலைவர் அப்பாஸ் மஸ்ஜெதி இது தொடர்பாக கூறுகையில் இன்னும் 4 உடல்கள் அடையாளம் கண்டறியப்படவில்லை. இறந்தவர்களில் 2875 பேர் ஆண்கள், 496 பேர் பெண்கள். 383 பேர் 18 வயது மற்றும் அதற்கும் குறைந்த வயதுடையவர்கள்” என்றார். இதில் வீரர்கள் எத்தனை பேர், பொது மக்கள் எத்தனை பேர் என கணக்கிடப்படவில்லை என்றார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவ தளங்கள் மற்றும் ஆயுத கிடங்குகளை குறிவைத்து பயங்கரதாக்குதல் நடத்தியது. இதனால் ஈரான் வீரர்களையும் உள்ளடக்கியதுதான் இந்த எண்ணிக்கையா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரான போரில் 3,375 பேர் உயிரிழப்பு – ஈரான்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>