அருள்நிதி நடித்த ‘அருள்வான்’ படம் ஜூலை 17 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ‘அருள்வான்’ படத்தின் ‘அல்லிபூவே’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் அருள்நிதி. இவர் ‘வம்சம், மவுனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13, டிமாண்டி காலனி 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதனிடையே, தகராறு, வீர சிவாஜி, தேன் படங்களை இயக்கவர் கணேஷ் விநாயக். இவரது இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அருள்வான்’. ரம்யா பாண்டியன், காளிவெங்கட், ஆரவ், கிருத்திகா மற்றும் ஜான்விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். 90 பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.இந்நிலையில், ‘அருள்வான்’ படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘அல்லிபூவே’ பாடலை யுகபாரதி வரிகளில் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து பாடியுள்ளார். இப்படம் வரும் 17 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அருள்நிதியின் “அருள்வான்” படம் ஜூலை 17 ம் தேதி வெளியாகிறது
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>