அர்ஜுன் தாஸ் நடிக்கும் “ஒன்ஸ் மோர்” படம் ஆகஸ்ட் 28 ந் தேதி வெளியாகிறது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான குரல் மற்றும் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள அர்ஜுன் தாஸ், நடிகை அதிதி ஷங்கர் உடன் இணைந்து நடித்துள்ள ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படம். ‘மாஸ்டர்’, ‘கைதி’, ‘விக்ரம்’ போன்ற படங்களில் வில்லன் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான அர்ஜுன் தாஸ், பின்னர் ‘அநீதி’, ‘ரசவாதி’, ‘போர்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது அவர், நடிகை அதிதி ஷங்கர் ஜோடியாக ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். ‘குட் நைட்’ மற்றும் ‘லவ்வர்’ போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘ஒன்ஸ் மோர்’ படம் ஆகஸ்ட் 28 ந் தேதி திரையங்குகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில், அர்ஜுன் தாஸ் நடிக்கும் “ஒன்ஸ் மோர்” படத்தின் இசை ஆல்பம் வெளியாகியுள்ளது. படத்தின் 13 பாடல்களையும் ஆல்பமாக படக்குழு வெளியிட்டுள்ளது.
அர்ஜுன் தாஸ் நடிக்கும் “ஒன்ஸ் மோர்” படம் ஆகஸ்ட் 28 ந் தேதி வெளியாகிறது
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>