கவின் – நயன்தாரா நடிக்கும் “ஹாய்” படத்தின் முன்னோட்டம் வெளியானது

Share

கவின்-நயன்தாரா இணைந்து நடிக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது. இத்திரைப்படம் வரும் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, நடிகர் கவினுடன் இணைந்து ‘ஹாய்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஷ்ணு எடவன் இயக்குகிறார். இந்தப் படத்தினை, ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ‘ரவுடி பிக்சர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ஜென் மார்டின் இசையமைப்பில், விஷ்ணு எடவன் எழுதிய வரிகளுக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் பாடிய ‘கண்ணக்குழியா’ பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ரசகுல்லா’ சமீபத்தில் வெளியானது. இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடலை, முன்னணி இசையமைப்பாளரும் பாடகருமான அனிருத் பாடியுள்ளார். இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைத்துள்ள இப்படத்தின் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், ‘ஹாய்’ படத்தின் முன்னோட்டம் வெளியானது. இத்திரைப்படம் வரும் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>