அ.தி.மு.க.வில் எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகிய 3 பேரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பின் தலைமை செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் மூவரும் த.வெ.க. இணைந்தனர். இதனை தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் சபாநாயகரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்கள், கட்சித் தாவல் புகர் உள்ள எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்கக்கூடாது என வலியுறுத்தினர். இதற்கிடையே, 3 பேர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், அம்பை அ.தி.மு.க. தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் அளித்தார். இதனால் 2 நாட்களில் 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். மேலும், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 16-ஆக குறைந்தது 2011, 2021, 2026 தேர்தல்களில் அம்பை தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் இசக்கி சுப்பையா என்பது குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா ராஜினாமா செய்துள்ளார்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>