கர்நாடக அரசால் காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை தொடர்பாக உத்தேசிக்கப்பட்டுள்ள பூமிபூஜை நிகழ்வைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். இதுதொடர்பான அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும், காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையையும் அப்பட்டமாக மீறும் வகையில், காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது நீர்த்தேக்கத்திற்கான ‘பூமி பூஜை’ நடைபெறும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளதை கனிவான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகவும், கர்நாடக மாநில துணை முதல்-அமைச்சர் இது தொடர்பாக பொது வெளியில் தெரிவித்திருப்பது தங்கள் வாழ்வாதாரத்திற்காக காவேரி ஆற்றையே நம்பியிருக்கும் தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான விவசாயிகளிடையே, மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். காவேரிப் படுகையானது நீர்ப் பற்றாக்குறை உள்ள படுகை என்பதைக் கருத்தில் கொண்டு, 50 சதவீத நம்பகத்தன்மை அடிப்படையில் கிடைக்கக்கூடிய நீர் ஏற்கனவே சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் கூடுதல் நீரைப் பயன்படுத்துவதற்கோ அல்லது புதிய பெரிய நீர்த்தேக்கத்தை உருவாக்குவதற்கோ எவ்வித வாய்ப்பும் இல்லை என்பதாலும் 16.02.2018 தேதியிட்ட தீர்ப்பின் மூலம் மாண்பமை உச்சநீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்ட, தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பாக அனுமதிக்கப்பட்டுள்ள திட்டங்களைத் தவிர்த்து, காவேரி ஆறு அல்லது அதன் துணை நதிகளின் குறுக்கே வேறு ஏதேனும் புதிய திட்டத்தைத் திட்டமிடுவது, மேற்குறிப்பிட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிடுவதற்குச் சமமானதாகும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இச்சூழலில், மேகதாது திட்ட முன்மொழிவின் விரிவான திட்ட அறிக்கையானது 05.02.2007 தேதியிட்ட காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணைக்கும், 16.02.2018 தேதியிட்ட மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் முரணாக அமைந்திருப்பதால், அத்திட்ட அறிக்கையை நிராகரிக்குமாறு மத்திய ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் மத்திய நீர்வள ஆணையம் ஆகியவற்றில் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்வதாகவும், படுகையில் அமைந்துள்ள பிற மாநிலங்களின் ஒப்புதலைப் பெறாமல் எந்தவொரு புதிய திட்டத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்றும், மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எவ்வகையிலும் மீறக்கூடாது என்றும் கர்நாடக அரசுக்கு அறிவுறுத்துமாறு இந்தியப் பிரதமர் அவர்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு முதல் – அமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>