அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடனான போர்ப் பதற்றம் காரணமாக ஈரானின் நாணயமான ரியால் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. நேற் றைய நிலவரப்படி, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரானிய நாணயமான ரியாலின் மதிப்பு 18.1 லட்சமாக சரிந்து புதிய உச் சத்தைத் தொட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ரியால் மதிப்பு 15 சதவீதம் சரிந்துள்ளது. இதன் காரணமாக பால், ரொட்டி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதுபோல ஒரு யூரோவுக்கு எதி ரான ரியாலின் மதிப்பு 21.1 லட்சம் ரியால்களாகும், ஒரு பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிரான மதிப்பு 24.4 லட்சம் ரியால்களாக அதலபாதாளத்துக்கு வீழ்ந்தது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>