அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணமாக மூன்றாம் சார்லஸ் சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட தலைவர்களை மன்னர் சார்லஸ் சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தும் விதமாக மன்னர் சார்லஸின் இந்தப் பயணம் அமைந்துள்ளது. பிரிட்டன் மன்னர் சார்லஸை அமெரிக்காவின் முக்கிய பிரமுகர்களும் சந்தித்து வருகிறார்கள். அந்த வகையில், நியூயார்க் நகர மேயர் சோஹ்ரன் மம்தானியும் சார்லஸை சந்திக்க இருந்தார். இந்தச் சந்திப்புக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய மம்தானி, “பிரிட்டன் மன்னர் 3ஆம் சார்லஸைச் சந்திக்கும்போது வரலாற்றுச் சிறப்புமிக்க கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் திருப்பித் தருமாறு அவரிடம் வலியுறுத்துவேன்,” என்று கூறினார். எனினும், மன்னர் 3ஆம் சார்லஸ் உடனான சந்திப்பின் போது வைரத்தைப் பற்றிய பேச்சு நடத்தப்பட்டதா என்பது குறித்து தெளிவான தகவல் ஏதுமில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவிக்க பக்கிங்ஹாம் அரண்மனையும் மறுத்துவிட்டது. மம்தானி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். கோஹினூர் வைரம் என்பது உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான வைரங்களில் ஒன்றாகும். கொல்லூர் சுரங்கம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இந்த 105.6 காரட் வைரம், தற்போது பிரிட்டிஷ் ராணியின் கிரீடத்தில் பதிக்கப்பட்டு லண்டன் கோபுரம்வில் உள்ளது. முகலாயர்கள், பாரசீகர்கள், ஆப்கானியர்கள் மற்றும் சீக்கியர்களின் கைமாறி, 1849-ல் பிரிட்டிஷாரால் கைப்பற்றப்பட்டது. இந்த வைரத்தை இந்தியாவிடம் திருப்பி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கோகினூர் வைரத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க சார்லஸிடம் கோருவேன் – நியூயார்க் மேயர் மம்தானி
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>