உக்ரைனில் இந்தியருக்கு சொந்தமான மருந்து பொருட்கள் குடோனில் ரஷியா நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். உக்ரைன் ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் சுமி நகரில் உள்ள மருந்து பொருட்கள் குடோன் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாகுதலில் மருந்து குடோனில் வேலை செய்து வந்த 52 வயதான ஊழியர் உயிரிழந்தார். இந்த மருந்து பொருட்கள் குடோன் இந்தியருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>