உக்ரைன் பயணிகள் ரெயில் மீது ரஷியா டிரோன் தாக்குதலில் ஓட்டுநர், உதவியாளர் உயிரிழந்தனர்

Share

உக்ரைன் பயணிகள் ரெயில் மீது ரஷியா டிரோன் தாக்குதலில் ஓட்டுநர், உதவியாளர் உயிரிழந்தனர். ஒடேசா பிராந்தியத்தில் சென்று கொண்டிருந்த பயணிகள் ரெயிலின் இன்ஜின் மீது ரஷியா ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி உக்ரைன் மீது ரஷியா தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம், நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்டார். ஆனால் முயற்சி தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் சென்று கொண்டிருந்த பயணிகள் ரெயிலின் இன்ஜின் மீது ரஷியா ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ரெயிலின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், தாக்குதலில் ரெயிலின் முன்பகுதி முழுவதுமாக தீப்பற்றி எரிந்த நிலையில், பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>