ஜேசன் விஜய்யின் “சிக்மா” படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

Share

ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்திலிருந்து யுவன் ஷங்கர் ராஜா பாடிய ‘அய்யய்யோ அம்மாடி’ பாடல் வெளியாது.  முதல்-அமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்குநராக ‘சிக்மா’ படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். மேலும் இந்தப் படத்தில் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள டொராண்டோ பிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பு டிப்ளமோ படித்துள்ளார். தொடர்ந்து லண்டனில் திரைக்கதை எழுதுவது தொடர்பான பி.ஏ. ஹானர்ஸ் படித்துள்ளார். சில குறும்படங்களை இயக்கியுள்ளார். ‘சிக்மா’ படத்தில் ஒரு சிறப்பு பாடலில் ஜேசன் சஞ்சய், கேத்தரின் தெரசா நடனமாடி உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஆக்சன் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. ‘சிக்மா’ படத்தின் முதல் பாடலான ‘சிக்மா ஸ்டைல்’ வெளியாகி வரவேற்பை பெற்றது. ‘சிக்மா’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், ‘சிக்மா’ படத்தின் இரண்டாவது பாடலான ‘அய்யய்யோ அம்மாடி’ வெளியாகியுள்ளது. விவேக் வரிகளில் உருவாகியுள்ள பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>