உடனடியான மற்றும் பாதுகாப்பான கனடிய எல்லை தாண்டிய பணப் பரிமாற்றத் திட்டத்தில் VISA Canada நிறுவனம் மற்றும் தமிழ்க் கனேடிய நிறுவனமான RemitBee ஆகியவை கரங்கோர்த்துள்ளன

Share

கனடாவில் குடிவரவாளர்கள் மற்றும் புதிதாகக் குடியேறியவர்களினால் பயன்படுத்தப்பெறும் பணப்பரிமாற்றங்கள் அவர்களின் வாழ்வில் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. இந்த வகையில் உடனடியான மற்றும் பாதுகாப்பான கனடிய எல்லை தாண்டிய பணப் பரிமாற்றத் திட்டத்தில் VISA Canada நிறுவனம் மற்றும் தமிழ்க் கனேடிய நிறுவனமான RemitBee ஆகியவை கரங்கோர்த்துள்ளன என்ற செய்தி எமது ஆசிரிய பீடத்திற்கு கிட்டியதும் அந்த முக்கியத்துவம் நிறைந்த இணைவு தொடர்பாக எமது வாசகர்களுக்கு தேவையான விபரங்களை வழங்குவதில் நாம் பெருமையடைகின்றோம்.

கடந்த 7ம் திகதி புதன்கிழமை நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்வில் இந்த இரண்டு நிறுவனங்கள் கைகோர்த்துள்ள உத்தியோக அறிவிப்பு இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் தமிழ்க் கனேடிய நிறுவனமான RemitBee யின் சார்பில் அதன் பிரதான செயற்பாட்டு அதிகாரியும் இணை நிறுவனருமான திரு மனோஸ் யோகநாதன் (Manos Yoganathan, COO and Co-Founder, RemitBee) கலந்து கொண்டு பயனுள்ள உரையாடல்களை நடத்தி இந்த கனடிய எல்லை தாண்டிய பணப் பரிமாற்றத் திட்டத்தில் VISA Canada நிறுவனம் மற்றும் தமிழ்க் கனேடிய நிறுவனமான RemitBee ஆகியவை கரங்கோர்த்துள்ளமையை குறிக்கும் பத்திரங்களில் கெயெழுத்திட்டார். அத்துடன் கனடிய தேசிய பத்திரிகைகள் மற்றும் தொலைகாட்சி செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

“வீட்டிற்குப் பணம் அனுப்புவதன் அர்த்தத்தை நேரடியாகப் புரிந்துகொண்ட கனடாவில் குடியேறியவர்களான நாங்கள் ரெமிட்பீ நிறுவனத்தை உருவாக்கினோம். எமது இந்த முயற்சி எல்லை தாண்டிய பணப் பரிமாற்றங்களை எளிமையாக்கும் ஒரு பணியாகத் தொடங்கியது, ஆனால் தற்பொழுது கனடாவின் மிகப்பெரிய பணப் பரிமாற்றத் தளங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. எம் போன்ற கனடாவில் குடியேறிய ஒரு குடும்ப உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் கனடாவின் வெற்றிக் கதையாக மாறியிருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், மேலும் விசா கனடா நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள இந்த இணைப்பு அதை இன்னும் ஒரு படி மேலே கொண்டு செல்ல உதவுகிறது.”

என்று உற்சாகமாகத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் “எமது RemitBee, நிறுவனம் தமிழர்களின் முயற்சியால் உருவான நிறுவனம் என்பதோடு, தமிழ் மக்களால் நன்கு அறியப்பெற்ற Thamor நிறுவனத்துடன் தொடர்புடைய வளர்ச்சிப் பயணத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளது. இன்று, இந்த நிறுவனம் 185க்கும் மேற்பட்ட நாடுகளில் பண பரிமாற்ற சேவைகளை வழங்கும் வல்லமை பெற்றுள்ளது என்பது தமிழ் மக்களை பெருமைக்குள் ஆழ்த்தும் விடயமாகும்.

இந்த புதிய இணைந்த செயற்பாட்டின் மூலம், RemitBee வாடிக்கையாளர்கள் உலகம் முழுவதும் உள்ள வங்கிக் கணக்குகள், டிஜிட்டல் வாலெட்டுகள் மற்றும் Visa கார்டுகளுக்கு உடனடி மற்றும் பாதுகாப்பான பண பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும். இது கனடாவில் வாழும் குடியேற்ற வாசிகளுக்கு மிகப்பெரிய வசதியாகவும் வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.

கனடாவில் வாழும் தமிழர்களுக்கு, இந்த சாதனை ஒரு பெருமைமிகு தருணமாகும். உலகளாவிய அளவில் முன்னேறிய ஒரு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது, தமிழர்கள் உலக அரங்கில் எட்டும் திறனையும் திறமையையும் வெளிப்படுத்துகிறது.

இந்த முன்னேற்றம், இளம் தமிழர்களுக்கு ஒரு உத்வேகம் அளிக்கும் உதாரணமாகவும் திகழ்கிறது — முயற்சி, விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை இருந்தால், உலகின் மிகப்பெரிய நிறுவனங்களுடன் கூட இணைந்து செயல்பட முடியும் என்பதற்கான தெளிவான சான்றாகும்.

தமிழ் சமூகத்தின் பலரும் இந்த சாதனையை கொண்டாடி வருகிறார்கள். இது ஒரு நிறுவனம் பெற்ற வெற்றியாக மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்களின் திறன் மற்றும் அடையாளத்தின் வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது.

கனடாவில் உள்ள பல குடியேற்றவாசிகளுக்குப் பரிச்சயமான ஒரு சவாலை எதிர்கொள்வதற்காக எமது ரெமிட்பீ நிறுவனம் 2015-ல் நிறுவப்பட்டது: அதாவது, பெரும்பாலும் அதிக செலவு மிக்கதாகவும், துண்டு துண்டானதாகவும், மற்றும் கையாள்வதற்கு கடினமானதாகவும் இருந்த எல்லை கடந்த பணப் பரிமாற்றங்கள் அப்போது செய்யப்பெற்றன. ஆனால் கடந்த பத்தாண்டுகளில், இந்நிறுவனம் தனிநபர் மற்றும் வணிகப் பயணர்கள் இருவருக்கும் சேவை செய்யும் ஒரு கனடிய எல்லை கடந்த பணப் பரிமாற்றத் தளமாக வளர்ந்துள்ளது. இது 190-க்கும் மேற்பட்ட நாடுகள், 150-க்கும் மேற்பட்ட நாணயங்கள் மற்றும் 200 பணப் பரிமாற்ற அமைப்புகளின் வலையமைப்புடன், உலகளவில் 4 பில்லியன் மக்களைச் சென்றடைகிறது. விசா டைரக்ட் நிறுவனத்துடனான இந்தக் கூட்டு முயற்சி, உள்நாட்டு நிதி தொழில்நுட்பச் சூழலுக்கு ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது, மேலும் உலகளாவிய எல்லை கடந்த பணப் பரிமாற்றத் தளத்தில் ஒரு கனடிய நிறுவனத்தின் இருப்பை வலுப்படுத்துகிறது.

மேற்படி விடயம் தொடர்பாக RemitBee யின் சார்பில் அதன் பிரதான செயற்பாட்டு அதிகாரியும் இணை நிறுவனருமான திரு மனோஸ் யோகநாதன் (Manos Yoganathan, COO and Co-Founder, RemitBee) அவர்கள் கனேடிய தேசியப் பத்திரிகையான The Globe and Mail இனது ஆசிரிய பீடத்திற்கு வழங்கிய பேட்டியில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“We built RemitBee as immigrants who understood firsthand what it means to send money home. What began as a mission to make cross-border payments simpler has grown into one of Canada’s largest payments platforms. We are proud that a company built by immigrants has become a Canadian success story, and that this union with Visa helps take it even further.”

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>