உண்மையான தீர்ப்பு வரும்வரை காத்திருப்போம் – தமிழிசை சவுந்தரராஜன்

Share

சென்னையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை தமிழிசை சவுந்தராஜன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:  போர்ச்சூழல் காரணமாக வணிக எரிவாயு தோம்பு விலை உயர்வு என்பது தற்காலிக மாற்றம் மட்டுமே. உலக நாடுகள் எல்லாம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவில் மட்டும் உயராமல் இருப்பது பிரதமர் மோடியின் நிர்வாக திறமையை காட்டுகிறது. இந்தியாவில் பிரதமர் மோடியின் நிர்வாகத் திறமையால் பெட்ரோல், டீசல், வீட்டு எரிவாயு தோம்பு விலை உயரவில்லை. வர்த்தக எரிவாயு தோம்பு விலை உயர்வு தற்காலிகமான மாற்றம்; போரின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும். கருத்துக்கணிப்புகள் பற்றி இப்போது கருத்து சொல்ல வேண்டாம். உண்மையான தீர்ப்பு வரும்வரை காத்திருப்போம் என்றார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>