மே 4ம் தேதி வெற்றிச் செய்தி வரும் – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

Share

உலக உழைப்பாளர்களின் திருநாளாம் மே தினத்தை ஒட்டி, சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, கேப்டன் விஜயகாந்த் சிலைக்கு மாலை அணி மரியாதை செய்தார். பிறகு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: கருத்துக்கணிப்பை நான் எப்படி பார்க்கிறேன் என்றால் ஆக்கப்பொறுத்தவர்கள் ஆறப்பொறுங்கள். எல்லாம் முடிந்து இருக்கிறது. இன்னும் 2 நாள்தான் இருக்கு.. மே 4ம் தேதி வெற்றிச் செய்தி வரும். எல்லோருக்கும் நல்லதே நடக்கும். எங்கள் மதச்சார்பற்ற வெற்றிக் கூட்டணி அமோக வெற்றி பெறும்; அண்ணன் ஸ்டாலின் மீண்டும் முதல்-அமைச்சராக வருவார் நாங்கள்(தேமுதிக) 10 பேர் போட்டியிட்டுள்ளோம். கேப்டன் ஆசீர்வாதத்துடன் 10 பேரும் சட்டசபைக்கு செல்வோம். எல்லோரும் வாழ்த்தினாலும் தேமுதிக தான், திட்டினாலும் தேமுதிக தான். பழுத்தமரம் தான் கல்லடி படும் என்ற விமர்சனங்களுக்கு மே 4-ம் தேதி பதில் கொடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>