எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யமாட்டேயென மதிமுக எம்எல்ஏ செந்தில்செல்வன் திட்டவட்டமாக கூறியுள்ளார்

Share

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யமாட்டேயென செந்தில் செல்வன் தெரிவித்துள்ளார்.  திமுக கூட்டணியில் இருந்த பிரதான கட்சிகள் வெளியேறிய நிலையில் அடுத்து மதிமுகவும் கூட்டணியில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. நாளை நடைபெறும் மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தங்களது முடிவை அறிவிப்பதாக மதிமுகவும் தெரிவித்திருக்கிறது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது பேசிய வைகோ, ” நமது கட்சிக்கு ஒளிமயமான எதிர்காலம் கண்களுக்கு தெரிகிறது.தொண்டர்கள் மன வருத்தத்தில் உள்ளனர். அவர்கள் மனதில் காயங்கள் உள்ளன. கடந்த, 9 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருந்தோம். நமக்கு போதுமான சீட் வழங்கவில்லை” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். தவெக கூட்டணியில் மதிமுக இனையபோவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டதை வைகோவின் பேச்சு காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதற்கிடையே உதயசூரியன் சின்னத்த்தில் போட்டியிட்டு வென்ற இரண்டு எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை ராஜினமா செய்ய இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இதனை சீர்காழி எம்.எல்.ஏ செந்தில்செல்வன் மறுத்துள்ளார். இது தொடர்பாக மதிமுக எம்எல்ஏ செந்தில்செல்வன் கூறும் போது, “பதவியை ராஜினாமா செய்யமாட்டேன், சீர்காழி எம்எல்ஏவாக தொடர்வேன்” என்றார். மதிமுகவில் இருந்து தற்போது விலகிவிட்டதாகவும் இதனால் நாளை நடைபெறும் உயர்நிலைக் குழு கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் எனவும் செந்தில் செல்வன் கூறியுள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>