போலியோ சொட்டுமருந்து முகாம் சென்னை பாலவாக்கத்தில் முதல் – அமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

Share

போலியோ சொட்டு மருந்து முகாமை சென்னை பாலவாக்கத்தில் முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார். போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்சுள், மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் மக்கள் கூடும் முக்கியமான பொது இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருத்து வழங்கப்படுகிறது. இந்த மையங்களில் 5 வயதிற்குட்பட்ட 50 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருத்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள போலியோ சொட்டு மருந்து முகாமை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார். அவர் சென்னை பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதி திராவிடர் பள்ளியில் நாளை  காலை 8 மணிக்கு போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைக்கிறார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>