மறைந்த பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 1916ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி மதுரையில் பிறந்தவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. அவர் தனது 10-வது வயதில் எச்.எம்.வி. நிறுவனத்திற்காக பாடி சாதனை படைத்தார். அதனைத்தொடர்ந்து சில படங்களிலும் நடித்தார். அவர் நடித்த முதல் படம் சேவாசதன். அதன் பின்னர் 4 படங்களில் எம்.எஸ். நடித்தார். அதில் அதிகம் பிரபலமடைந்த படம் மீரா. கர்நாடக இசையின் ராணியாக கோலோச்சி வந்த எம்.எஸ். பெறாத பட்டங்களோ, பரிசுகளோ கிடையாது எனக் கூறும் வகையில் அத்தனை உயர் பரிசுகளையும், பட்டங்களையும் பெற்றார். 1954ல் பத்மபூஷன் விருதைப் பெற்றார். மியூசிக் அகாடமி வழங்கும் சங்கீத கலாநிதி பட்டத்தை 1968ல் பெற்றார். இந்த விருதைப் பெற்றமுதல் பெண்மணி எம்.எஸ்.தான். 1998ல் இந்தியாவின் உயரிய விருதான பாரதரத்னா விருதைப் பெற்றார். இவர் கடந்த 2004-ம் ஆண்டு தனது 88-வது வயதில் உயிரிழந்தார். இவரின் வாழ்க்கை வரலாறை சினிமா படமாக்க கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை தெலுங்கில் ஜெர்ஸி, கிங்டம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய கௌதம் தின்னூரி இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அல்லு அரவிந்த், பன்னிவாசு, ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இதில் எம்.எஸ்.சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் முன்னணி நடிகைகள் திரிஷா, நயன்தாரா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் எதுவும் கைக்கூடாததால் சாய் பல்லவி இறுதிசெய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் அவருக்கு பதில் ருக்மிணி வசந்த் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இறுதியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பதந்தமாகியுள்ளதாகவும் இது குறித்து அறிவிப்பு எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்தநாளான செப்டம்பர் 16ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெலுங்கு திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>