சிவராஜ்குமார் நடிக்கும் “ஒரிஜினல் மான்ஸ்டர்” படத்தின் பதாகை வெளியானது

Share

சிவராஜ்குமாரின் ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’ படத்தின் பதாகையை படக்குழு வெளியிட்டு, படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் அறிவிப்பு விழா மும்பையில் நடந்தது.

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவ ராஜ்குமார் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’ என பெயரிடப்பட்டு, டைட்டிலுக்கான மோசன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை சந்துரு இயக்குகிறார். ‘கப்ஜா’ படத்திற்கு பிறகு ஆர்.சந்துருவுடன் மீண்டும் இணைந்திருக்கிறார் சிவராஜ்குமார். படத்துக்கு அஜனீஷ் லோகேஷ் இசையமைக்கிறார். பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை ஆர் சி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யமுனா சந்திரா தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஆனந்த் பண்டிட் வழங்குகிறார். இந்நிலையில், ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’ படத்தின் பதாகையை படக்குழு வெளியிட்டு, படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் அறிவிப்பு விழா மும்பையில் நடந்தது. சிவ ராஜ்குமார் கையில் பயங்கரமான ஆயுதங்களுடன் துவி சக்கர வாகனத்தில் பயணிப்பது போன்ற முதல்காட்சி பதாகை மற்றும் எதிரிகளை கொன்று குவித்து ரத்தம் கோய்ந்த ஆயுதத்துடன் கம்பீரமாக அமர்ந்திருக்கும் பதாகை ஆகியவை வெளியாகி படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தி இருக்கிறது

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>