‘ஐ எம் கேம்’ படத்தின் ‘லூசர்’ பாடல் வெளியானது

Share

 ‘ஐ எம் கேம்’ படத்தின் ‘லூசர்’ பாடல் வெளியானது. ஆர்டிஎக்ஸ் திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து, அவரே தயாரித்துள்ள ஒரு பிரம்மாண்டமான மலையாள ஆக்ஷன் த்ரில்லர் ‘ஐ எம் கேம்’. சூதாட்டம், பந்தயம் மற்றும் கிரிக்கெட் விளையாட்டின் பின்னணியில், அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி, அதாவது தனது உயிரைவிட அதிர்ஷ்டமே பெரிது என வாழும் ஒருவனின் கதையை படம் விவரிக்கிறது. துல்கர் சல்மானுடன் இணைந்து கயாடு லோஹர், மிஷ்கின், ஆண்டனி வர்கீஸ், சம்யுக்தா விஸ்வநாதன், வினய் ஃபோர்ட் மற்றும் கதிர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் ஆக.20ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின் செப்.3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் ‘லூசர்’ வெளியாகி உள்ளது. சுஹைல் கோயா வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை துல்கர் சல்மானும் இணைந்துப் பாடியுள்ளார். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>