யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படம் முதல் நாளில் ரூ.101.10 கோடி வசூலானது

Share

யஷ் நடிக்கும்  ‘டாக்ஸிக்’ படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் ரூ.101.10 கோடி வசூலானது. உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ‘ராக்ஸ்டார்’ யஷ் நடிப்பில் பிரமாண்ட திரைப்படமான ‘டாக்ஸிக்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் பலர் கலவையான விமர்சனங்களை அளித்திருந்தாலும், பாக்ஸ் ஆபீஸில் முதல் நாளிலேயே வசூல் வேட்டையை தொடங்கியுள்ளது. இந்தியாவில் மட்டும் முதல் நாளில் ரூ.101.10 கோடி நிகர் வசூலை பெற்று இப்படம் புதிய சாதனை படைத்துள்ளது. ‘டாக்ஸிக்’ திரைப்படம் உலகளவில் மொத்தம் ரூ.140.75 கோடி வசூலித்து மாபெரும் சாதனையை படைத்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 24,579 காட்சிகள் மூலம் ரூ.101.10 கோடி நிகர வசூலும், ரூ.120.75 கோடி மொத்த வசூலும் கிடைத்துள்ளதுடன், வெளிநாடுகளில் இருந்து ரூ.20.00 கோடி வசூலைப் பெற்றுள்ளது. ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் மாநில வாரியான வசூலில் வட இந்திய திரையரங்குகள் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளன. இதில் அதிகபட்சமாக இந்தி திரையுலகில் ரூ.55.00 கோடியும், கன்னடத்தில் ரூ.23.30 கோடியும், தெலுங்கில் ரூ.16.00 கோடியும், தமிழில் ரூ.5.50 கோடியும் மற்றும் மலையாள திரையுலகில் ரூ.1.30 கோடியும் வசூலாகியுள்ளது. பிரபல இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் யஷ் உடன் இணைந்து நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>