ஒப்பிலா வீரத்துக்கு சொந்தக்காரர் ஒண்டிவீரன்யென மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தினார். சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 255-வது நினைவு தினத்தையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: “18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே ஆங்கிலேயப் படைகளுக்கு அடிபணிய மறுத்து, அவர்களை அடித்து விரட்டிய ஒப்பிலா வீரத்துக்குச் சொந்தக்காரரான ஒண்டிவீரன் அவர்களின் நினைவுநாள். பூலித்தேவரின் சிறந்த போர்ப்படைத் தளபதியாகவும் தென்னகத்தின் விடுதலை உணர்ச்சியை வெளிப்படுத்திய தென்மலைப் போர் நாயகனாகவும் திகழ்ந்த அப்பெருந்தீரரின் புகழ் அழியாது மக்கள் மனங்களில் வாழும்!” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>