கவன ஈர்ப்பு தீர்மானம் தொடர்பாக சபாநாயகருக்கு அமைச்சர் செங்கோட்டையன் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். தமிழக சட்டசபையில் அலுவல்கள் தொடங்கியதும், நேரமில்லா நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படவில்லை. இதனை தொடர்ந்து, சவுதி அரேபியாவில் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அ.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், ”மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் மாவீரன், சவுதி அரேபியாவில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது ஈரானிய கடற்கொள்ளையர்கள் சுட்டதில் மீனவர் மாவீரன் உயிரிழந்தார். ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சவுதி அரேபியாவில் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் மீனவர் மாவீரன் உடலை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மீனவர் மாவீரன் உடலை தமிழகம் கொண்டு வர தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக சட்டமன்ற உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரும்போது, அதற்கு அமைச்சர்களிடம் பதில் இருக்கிறதா? என்பதை முதலில் அறிந்துகொண்டு தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என அவை முன்னவர் செங்கோட்டையன் கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், நாளை முதல் அமைச்சர்களுடைய பதில்கள் கிடைக்கப்பெற்ற பிறகே சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டுவரும் கவன ஈர்ப்பு தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
கவன ஈர்ப்பு தீர்மானம் தொடர்பாக சபாநாயகருக்கு அமைச்சர் செங்கோட்டையன் கோரிக்கை வைத்தார்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>