ஒரு வாக்குகூட விடாமல் பதிவு செய்து நம் ஜனநாயகத்தின் வலிமையை உறுதி செய்ய வேண்டும் – தவெக.

Share

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 56.81 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

இந்த நிலையில் ஒரு வாக்குகூட விடாமல் பதிவு செய்து நம் ஜனநாயகத்தின் வலிமையை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: வாக்காளப் பெருமக்களே, வணக்கம். நமது வாக்கு- நமது உரிமை. ஜனநாயகக் கடமை. எக்காரணம் கொண்டும் வாக்களிக்காமல் இருந்து விடாதீர்கள். தயவு செய்து பொறுமையுடன் காத்திருந்து, வரிசையை விட்டு விலகாது நின்று, ஜனநாயகக் கடமை ஆற்றுவதைத் தவிர்க்காதீர். ஜனநாயகம் காப்பது நம் கடமை. ஒரு வாக்குகூட விடாமல் பதிவு செய்து நம் ஜனநாயகத்தின் வலிமையை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>