கனடாவில் இயங்கிவரும் ‘ஓந்தாச்சிமடம் மக்கள் – கனடா ஒன்றியம்’ நடத்திய ‘கோடைகால ஒன்றுகூடல்’ குதூகலமாக கொண்டாடப்பெற்றது!

Share

எமது தாய்த் தமிழ் மண்ணின் கிழக்கில் ஒரு அற்புதப் புள்ளியாய் விளங்கும் ‘ஓந்தாச்சிமடம் கிராமத்தை பிறப்பிடமாகவும் புகுந்த இடமாகவும் கொண்டு கனடாவில் வாழ்ந்து வரும் அன்பர்களால் ஆரம்பிக்கப்பெற்று இங்கு இயங்கிவரும் ‘ஓந்தாச்சிமடம் மக்கள் – கனடா ஒன்றியம்’ நடத்திய ‘கோடைகால ஒன்றுகூடல்’ 2026′ முழுநாள் நிகழ்வு 03-08-2026 அன்று திங்கட்கிழமை குதூகலமாக கொண்டாடப்பெற்றது!

ஸ்காபுறோ மற்றும் மார்க்கம் நகரங்களுக்கு எல்லைக்கோடாக விளங்கும் பூங்காவில் நடைபெற்ற இந்த அற்புதமான கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அன்பர்கள் அனைவரும் ஏற்பாட்டாளர்களது விருந்தோம்பலை உற்சாகமாக அனுபவித்தனர்.

விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சிறுவர் சிறுமியர்களுக்கான போட்டிகள் மற்றும் பொழுது போக்கு நிகழ்வுகள் என அனைத்து சிறந்த முறையில் ஏற்பாடு செய்யப்பெற்று பரிசுகளும் பாராட்டுப் பத்திரங்களும் வழங்கப்பெற்றன.

இந்த அற்புதமான முழுநாள் ஒன்றுகூடலை சிறப்பாக நடத்த ‘ஓந்தாச்சிமடம் மக்கள்-கனடா ஒன்றியம்’ அமைப்பின் தலைவர்: மார்கண்டுலிங்கம் ரகு

செயலாளர்: மாணிக்கவாசகம் விஜிதரன்

பொருளாளர்: செல்வரெத்தினம்: ஜசிகுமார் உட்பட அனைத்து உறுப்பினர்களும் நண்பர்களும் தங்கள் பங்களிப்பையும் நேரத்தையும் அர்ப்பணித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
மதிய உணவு உட்பட சுவையான சிற்றூண்டிகள் மற்றும் பானங்கள் என அனைத்தையும் ரசித்து சுவைத்து கிழக்கின் அடையாளமாகத் திகழும் ‘விருந்தோம்பலை’ அன்றைய தினம் அங்கு கலந்து கொண்ட நண்பர்கள் பலர் அனுபவித்தும் பாராட்டியும் சென்றார்கள் என்றால் அது மிகையாகாது

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>