ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா, இப்படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி, இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், சுவாஷிகா, ஷிவிதா, அனஹா மாயா ரவி, சுப்ரீத் ரெட்டி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கருப்பு”. நீதிமன்றங்களில் பல ஆயிரம் வழக்குகளுக்கு தீர்ப்பளிக்கப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கிவிட்டால் தனது பிழைப்புக்கு பணம் கிடைக்காமல் போய்விடும் என்று வழக்கறிஞர்கள் தீர்ப்பளிப்பதை தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு பெண்ணின் வழக்கை வழக்கறிஞராக வரும் ஆர்.ஜே.பாலாஜி தீர்ப்பளிக்க முடியாதபடி வாய்தா வாங்கிக் கொண்டும் வழக்காடுவதற்கு அவ்வப்போது பணம் வாங்கிக் கொண்டும் இருக்கிறார். இதையறிந்த அந்த பெண்ணும் தனது வழக்கை விசாரிக்க மற்ற வழக்கறிஞர்களை நாடுகிறார். ஆனால் எந்த வழக்கறிஞர்களும் அப்பெண்ணின் வழக்கை எடுத்துக் கொள்ள மறுக்கிறார்கள். அப்போது அந்த பெண் நீதிமன்ற வளாகத்திலுள்ள கருப்பசாமி கோவிலில் வந்து முறையிடுகிறாள். அவளின் பிராத்தனைக்கு மனமிறங்கிய கருப்பசாமி சூர்யா உருவத்தில் மனிதனாக வருகிறார். சூர்யாவுக்கும் ஆர்.ஜே.பாலாஜிக்கும் ஒரு சவால் வருகிறது. அது என்ன சவால்? நீதிமன்றத்தில் தேங்கிகிடக்கும் வழக்குகள் என்ன ஆனது? வேண்டுதல் செய்த அந்த பெண்ணின் வழக்கை வாதாட எந்த வழக்கறிஞர் முன்வந்தார்? என்பதுதான் மீதிக்கதை. படம் ஆரம்பம் முதல் முடிவு வரை சூர்யா தூள் பறத்துகிறார். சூர்யாவின் கிராமிய ஆடலுக்கு இசையமைப்பாளர் சாய் அபயங்காரின் இசை அசைவப் படையல் படைத்திருக்கிறது. கருப்பு வேட்டி சட்டையுடன் சூர்யா ஆடும் ஆட்டம் திரையரங்கை அதிர வைக்கிறது. அவரின் ரசிகர்களுக்கு சூர்யா படையல் விருந்து படைத்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு. பிறகு ஒரு வணிக ரீதியான படத்தை கொடுத்திருக்கிறார் சூர்யா. வழக்கறிஞராக வரும் ஆர்.ஜே.பாலாஜி நீதிமன்ற அவலங்களை துடைத்தெறிய வேண்டும் என்ற சமூக அக்கறையுடன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். வழக்கமான நகைச்சுவையுடன் வில்லத்தனத்தை காட்டி நடித்திருக்கும் ஆர்.ஜே.பாலாஜியின் வெற்றிக்கு இப்படம் ஒரு படிக்கல்லாக இருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்காடும்போது பித்துபிடித்தவராக வாய் உளறும் காட்சிகளில் சிரிக்க மறந்தவன்கூட சிரித்து விடுவான். அப்படிப்பட்ட ஒரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. சூர்யாவிற்க்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார். வழக்கறிஞராக வரும் திரிஷா நீதிமன்றத்தில் வாதாடும்போதும் கருப்பசாமியின் பக்தையாக வரும் காட்சிகளில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்கிறார். தனது கதாபாத்திரத்தின் தன்மையை உள்வாங்கி அழகாக நடித்துக் கொடுத்துள்ளார். சண்டை இயக்குநர் விக்ரம் மோரின் சண்டைக் காட்சிகளும், ஒலிக்கலவையாளர் வினய் ஶ்ரீதரின் உழைப்பும், ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணுவின் அபாரத்திறமையும் படத்துக்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. மொத்தத்தில் படம், “குறையேதுமில்லை மறைமூர்த்தி பாலாஜி.”
“கருப்பு” திரைப்பட முன்னோட்ட காணொளி
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>