“சட்டென்று மாறுது வானிலை” திரைப்பட முன்னோட்ட காணொளி

Share

பிவி பிரேம்ஸ் தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், ஜெய், யோகிபாபு, மீனாட்ஷி கோவிந்தராஜன், கருடா ராம், சத்யன், ஶ்ரீமன், ஆதித்யா கதிர் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “சட்டென்று மாறும் வானிலை”. ஜெய் ஒரு தொழில்நுட்ப குழுமத்தில் வேலை பார்க்கிறார். அங்கு மீனாட்சி கோவிந்தராஜனை பார்த்தவுடன் அவர்மீது காதல் வசப்படுகிறார். இருவரும் காதலித்து திருமணமும் செய்துகொள்கிறார்கள். இருவரும் தேனிலவுக்காக கொடைக்கானலுக்குச் சென்று, கருடன் ராம் நடத்திவரும் உல்லாச விடுதியில் தங்குகிறார்கள்.  அங்கிருந்து வந்த பிறகு ஜெய், மீனாட்சி இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது. மேலும் கருடன் ராம் விடுதியில் ஏதோ மர்மம் இருப்பதையும் ஜெய் அறிந்து கொள்கிறார். ஒரு பக்கம் மீனாட்சியின் தந்தையான அமைச்சர் அஜய், மீனாட்சியை இரண்டாம் தாரமாக ஒருவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்கிறார். மீனாட்சியின் நண்பர் சொத்துக்காக மீனாட்சியை திருமணம் செய்ய நினைக்கிறார். இவ்வளவு பிரச்சனையில் ஜெய் மற்றும் மீனாட்சி இருவரும் வாழ்க்கையில் ஒன்றாக வாழ்ந்தார்களா? இல்லையா? என்பதை படத்தின் மீதிக்கதை. படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஜெய், தொழில்நுட்ப இளைஞராக நடித்து கவர்ந்து இருக்கிறார். காதல், நடனம், நடிப்பு, அழுகை, பாசம் என நடிப்பில் வேகம் காட்டுகிறார் குறிப்பாக நாயகி மீனாட்சி உடன் உல்லாச காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மீனாட்சி கோவிந்தராஜன் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஜெய் மீது பாசம், தந்தை மீது வெறுப்பு, நண்பன் மீது கோபம் என நடிப்பில் பளிச்சிடுகிறார். வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் கருடன் ராம். இவருக்கு இணையாக வில்லனிசம் செய்து இருக்கிறார் அஜய். யோகி பாபுவின் நகைச்சுவை ஆங்காங்கே சிரிக்க வைக்கிறது. வணிகரீதியான படத்திற்கு உண்டான அனைத்து அம்சங்களையும் வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் பாபு விஜய். மெதுவாக தொடங்கும் திரைக்கதை இறுதியில் வேகம் எடுத்து இருக்கிறது. கொஞ்சம் சினிமாத்தன மீறல்களை தவிர்த்து இருக்கலாம். கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் பாடல்கள் கேட்கும்படி அமைந்திருக்கிறது. படத்துக்கு பின்னணி இசையும் ஒளிப்பதிவும் பக்கபலமாக அமைந்து பார்வையாளர்களுக்கு சலிப்புத்தட்டாமல் இருக்கச் செய்கிறது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>