கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தனர்

Share

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற கும்பக்கரை அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அங்கு குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் அருவியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மலைப் பகுதியில் இருந்து வரும் நீரின் அளவு மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது. இதையடுத்து இன்று (புதன்கிழமை) காலை முதலே கும்பக்கரை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி, வெள்ளம்போல் பாய்ந்து வருகிறது. அருவியில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நீர்வரத்தைக் கண்காணித்த தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரிகள், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தனர். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>