புதிய மதுபானசாலையை எதிர்த்து 8ம் திகதி வியாழக்கிழமை வலி வடக்கில் பாரிய போராட்டம்!

Share

யாழ்ப்பாண . மாவட்டத்தில் 04 புதிய மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் வலி வடக்கு பிரதேச சபை எல்லைக்குள்ளும் ஒரு மதுபானசாலைக்கான அனுமதி வழங்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

இந் நிலையில் இதுவரை காலமும் மதுபானசாலைகளற்ற பிரதேசமாக காணப்படும் வலி வடக்கில் மதுபானசாலை அனுமதி வழங்கப்படுவதை கண்டித்து பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் எதிர்ப்பு கண்டன பேரணி ஒன்று வியாழக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.

வியாழன் காலை 9.00 மணிக்கு தெல்லிப்பழைச் சந்தியில் ஆரம்பமாகும். எதிர்ப்பு பேரணி தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் மகஜர் கையளித்தலுடன் நிறைவடையும். எனவே அனைத்து சமூக ஆர்வலர்களும் இப் போராட்டத்தில் பங்கெடுக்கவும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>