கோண்டாவில் பிரபல விற்பனை நிலையத்தில் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனைக்கு இருந்ததால் தொடரப்பட்ட வழக்கில் உரிமையாளரை விடுவிக்க நீதிமன்றத்தில் பொய் வாதம் செய்த சட்டத்தரணிகள்?

Share

மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் கோரிய இடைக்கால நிவாரணங்களை வழங்க நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

பலாலி வீதி, கோண்டாவில் பகுதியில் உள்ள ஓர் பிரபல விற்பனை நிலையத்தில் காலாவதியான சொக்கிலேட், பால் போத்தல் உள்ளிட்ட 3 வகையான பொருள்கள் விற்பனைக்கு தயாராக இருந்தபோது பொதுச் சுகாதார உத்தியோகத்தரால் கண்டு பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் மேலதிக நிதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கு மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணையின்போது இதே வகையான முற் குற்றமும் உள்ளமை மன்றுரைக்கப்பட்டது.்

மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் கோரிய இடைக்கால நிவாரணங்களை வழங்க நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

வழக்கை ஆராய்ந்த யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதி உசைன் வியாபார நிலையத்தின் வியாபார அனுமதியை இரத்து செய்யுமாறும் இந்த உத்தரவை இரு தேசிய பத்திரிகையில் பிரசுரிப்பதோடு வியாபார உரிமை இரத்து உத்தரவை நல்லூர் பிரதேச சபைக்கு அறிவிக்குமாறும் கட்டளையிட்டார்..

இவ்வாறு மேலதிக நீதவான் பிறப்பித்த கட்டளைகளை இரத்துச் செய்து இடைக்கால நிவாரணம் ஒன்றை வழங்குமாறு கோரி வியாபார அனுமதி இரத்து செய்யப்பட்ட நிறுவனம் சார்பில் மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது நிறுவனத்தின் சார்பில் 3 சட்டத்தரணிகள் எவ்வித தயக்கமும் இல்லாமல் உண்மையை மறைத்து பொய்வாதம் செய்தார்கள் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான சட்டத்தரணிகள் சமூகத்திற்கு துரோகம் விளைவிப்பவர்கள் என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

வழக்கை ஆராய்ந்த மேல்நீதிமன்ற நீதிபதி சி.சதீஸ்தரன் இடைக்கால நிவாரணம் எவையும் வழங்க முடியாது எனவும் வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி இடம்பெறுமென வழக்கிற்கு திகதியிட்டு ஒத்தி வைத்தார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>