ரொறன்ரோ நகரசபையின் 23ம் வட்டார வேட்பாளர்களில் ஒருவரான ஹொன் டொங் (Hon Dong) அவர்களின் பிரச்சார அலுவலக திறப்பு விழா!
ரொறன்ரோ நகரசபையின் 23ம் வட்டார வேட்பாளர்களில் ஒருவரான ஹொன் டொங் (Hon Dong)அவர்களின் பிரச்சார அலுவலக திறப்பு விழா அவரது வட்டாரத்தில் கடந்த 30ம் திகதி மதியம் சிறப்பாக நடைபெற்றது. இதற்கு முன்னர் மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஆகியவற்றில் உறுப்பினராக பதவி வகித்த ஹொன் டொங் (Hon Dong)அவர்களின் அரசியல் அனுபவம் அளவிற்கு அதிகமானது என்பதை பலரும் அறிந்துவைத்துள்ளனர்.
அன்றைய திறப்பு விழாவில் பல்லினங்களைச் சார்ந்த ஆதரவாளர்கள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு திரண்டு வந்து வேட்பாளர் ஹொன் டொங் (Hon Dong)அவர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தார்கள்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மரிய மின்னா- ஜிம் கரிஜியானிஸ் மறறும் மாகாண பாராளுமன்ற உறுப்பினர் பாஸ் பால்கிசூன் உட்பட அவரது நெருங்கிய நண்பர்களான வர்த்தகப் பிரமுகர்கள் கணேசன் சுகுமார் மற்றும் குலா செல்லத்துரை ஆகியோரும் அங்கு வருகை தந்து தங்கள் வாழ்த்துக்களை ஹொன் டொங் (Hon Dong)அவர்களுக்கு தெரிவித்தார்கள்.
ஏராளமான தமிழ் வாக்காளப் பெருமக்களும் அங்கு திரண்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
இங்கே காணப்படும் அங்கு எடுக்கப்பட்டவையாகும்.-
நன்றி: ‘பிகைன்ட் மீ ‘ஊடகம்:படங்கள் உதவியமைக்கு:-