சீனாவிற்கு ஆதரவு: அமெரிக்காவிற்கு தைவான் நன்றி

Share

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று சீனாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். தனது முதல் பதவிக்காலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு சீனா சென்றிருந்த டிரம்ப், 2-வது பதவிக்காலத்திலும் சீனா சென்றுள்ளார். அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள், ஈரான் போர், ஏற்றுமதி கட்டுப்பாடு, அரிய வகை கனிம வினியோக தடை, தைவானுக்கு அமெரிக்காவின் ஆயுத ஏற்றுமதி உள்ளிட்ட பிரச்சினைகளால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், டிரம்பின் இந்த பயணம் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது. தலைநகர் பீஜிங்கில் சீன அதிபர் ஜின்பிங்கை டிரம்ப் சந்தித்து பேசினார். சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த முதல் சுற்று பேச்சுவார்த்தையில் ஹார்முஸ் பிரச்சினை, ஈரான் போர், வர்த்தக பதற்றம். தைவான் விவகாரம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றன. குறிப்பாக சர்வதேச எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதற்கு ஹார்முஸ் நீரிணை திறப்பு அவசியமானது என இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். மேலும் இரு நாடுகளுக்கு இடையேயான வலுவான பரஸ்பர உறவை கட்டமைப்பதில் புதிய பார்வை வேண்டும் என இருவரும் ஏற்றுக்கொண்டனர். அமெரிக்காவின் இந்த பரிந்துரையை ஏற்பதாக ஜின்பிங் கூறினார். இந்த புதிய தொலைநோக்குப் பார்வை, அடுத்த 3 ஆண்டுகளுக்கும் அதற்குப் பின்னரும் இருதரப்பு உறவுகளுக்கு வியூக வழிகாட்டுதலை வழங்கும் என்பதோடு, இரு நாடுகளின் மக்களும் சர்வதேச சமூகமும் இதனை வரவேற்க வேண்டும் என்றும் ஜின்பிங் தெரிவித்தார். அதேநேரம் சீனா-அமெரிக்கா உறவில் தைவான் விவகாரம் மிக முக்கிய பிரச்சினையாக இருப்பதாக தெரிவித்த ஜின்பிங். இந்த விவகாரத்தை சரியாக கையாண்டால் சீனா-அமெரிக்கா உறவில் ஒட்டுமொத்த நிலைத்தன்மையை அனுபவிக்க முடியும் என்றும் கூறினார். அதேநேரம் தவறாக கையாண்டால் சீனாவும், அமெரிக்காவும் மோதலை மட்டுமின்றி போரை கூட எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்தார். இந்தநிலையில், தைவானை சீனா சொந்​தம் கொண்​டாடி வருவதை ஏற்​காத அமெரிக்​கா, தொடந்து தைவானுக்கு ஆதரவு அளித்து வரு​கிறது. இதுகுறித்து தைவான் பிரதமரின் செய்​தித் தொடர்​பாளர் மிஷேல் லீ கூறுகை​யில், பி​ராந்​திய ஸ்திரத்​ தன்​மைக்கு பங்​களிக்​கும் மற்றும் சர்​வா​தி​கார விரி​வாக்​கத்​தால் ஏற்​படக்​கூடிய அபாயங்களை நிர்​வகிக்​கும் அனைத்து நடவடிக்​கைகளை​யும் எங்​கள் அரசு சாதக​மாகப் பார்க்​கிறது. தேசி​யப் பாது​காப்பு மற்​றும் ராஜதந்​திரம் தொடர்​பாக அமெரிக்கா​வுடன் தைவான் நெருங்​கிய தொடர்​பில் இருக்கிறது. தைவானை ஆதரிக்​கும் தனது உறு​தி​யான நிலைப்​பாட்டை அமெரிக்கா​வும் பலமுறை தொடர்ந்து வலி​யுறுத்​தி​யுள்​ளது. இதற்காக நன்றி தெரிவிக்கிறோம் என்றார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>