மேற்கு ஆசியாவின் அமைதிக்கு இந்தியா பெரும் பங்கு வகிக்க முடியும் – அப்பாஸ் அராக்சி

Share

பிரிக்ஸ் மாநாடு டில்லியில் நடைபெற்றது. இதில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கலந்து கொண்டார். அவர் மேற்காசிய நெருக்கடி தொடர்பாக பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: மேற்கு ஆசியாவின் அமைதிக்கு இந்தியா பெரும் பங்கு வகிக்க முடியும். இந்தியாவின் எந்தவொரு ஆக்கபூர்வமான பங்களிப்பையும் நாங்கள் வரவேற்போம். அமெரிக்காவை நம்பாமல் இருக்க ஈரானுக்கு எல்லா காரணங்களும் உள்ளன. ஈரானை நம்ப அமெரிக்கர்களுக்கு எல்லா காரணங்களும் உள்ளன. ஈரான் தொடர்பான எதற்கும் ராணுவ தீர்வு இல்லை. ஈரான் ஒருபோதும் அணுஆயுதங்களை விரும்பவில்லை. இவ்வாறு அப்பாஸ் அராக்சி தெரிவித்தார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>