சீனாவில் துணி தொழிற்சாலையில் தீ விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர்

Share

சீனாவில் துணி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 பேர் பலியாகியுள்ளனர். சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் ஷன்டே மாவட்டம் ஆடை உற்பத்திக்கான முக்கிய பகுதியாக உள்ளது. வெளிநாட்டு நிதி உதவியுடன் நடத்த கூடிய நிறுவனங்கள், கூட்டு பங்குதாரர்களுடன் கூடிய நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் என பல்வேறு வகையான நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஷன்டே மாவட்டத்தில் குவாங்சவ் பகுதிக்கு 20 கி.மீ. தொலைவில் துணி தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஆலையில் இருந்து தொழிலாளர்கள் தப்பியோட முயன்றனர். எனினும், இதில் சிக்கி 8 பேர் பலியாகியுள்ளனர். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>