தேசிய மட்டத்தில் பதக்கங்களை குவித்த வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு அளிக்கப்பெற்ற கௌரவம்!

Share

அகில இலங்கை தேசிய மட்ட தமிழ்மொழித்தினப் போட்டி 2026 மற்றும் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட விளையாட்டுப் போட்டி போன்றவற்றில் கலந்துகொண்ட யாழ். வட்டு இந்துக் கல்லூரி மாணவர்கள் நான்கு பதக்கங்களை தம்வசம் சுவீகரித்துள்ளனர்.

கடந்த 19. 20 சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருதினங்கள் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் அகில இலங்கை தேசிய மட்ட தமிழ்மொழித்தினப் போட்டியும் பொலநறுவை றோயல் கல்லூரியில் 40 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியும் இடம்பெற்றது. குறித்த போட்டிகளில் கலந்துகொண்ட மாணவர்களே நான்கு பதக்கங்களை தம்வசம் சுவீகரித்துக் கொண்டுள்ளனர்.

அகில இலங்கை தேசிய மட்ட தமிழ்மொழித்தினப் போட்டி 2026 இல் அறிவிப்பாளர் போட்டியில் அருந்தவன் சரண்யா இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளிப் பதக்கத்தையும் தேசிய மட்ட விவாதப் போட்டியில் மூன்றாம் இடத்தை அ.சரணியா, ஆ.றுஜிதா, ச.ஷைந்தவி ஆகியோர் பெற்று வெண்கல பதக்கத்தையும் சுவீகரித்துக் கொண்டுள்ளனர்.

இதேவேளை, அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட விளையாட்டுப் போட்டியில் பளுதூக்கல் நிகழ்வில் 17 வயது ஆண்கள் பிரிவில் 96 கிலோ கிராம் எடையில் அ.அற்புதன் இரண்டாம் இடத்தினைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும் 17 வயது பெண்கள் பிரிவில் 71 கிலோ கிராம் இடையில் கே.சாத்விகா மூன்றாவது இடத்தை பெற்று வெண்கல பதக்கத்தையும் சுவீகரித்துக் கொண்டுள்ளனர்.

22ம் திகதி அன்றைய தினம் யாழ்.வாட்டு இந்து கல்லூரி மைதான திறந்தவெளி அரங்கில் பாராட்டு வைபவம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. கல்லூரியின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பதக்கங்களை வழங்கி வைத்ததோடு தேசிய மட்ட போட்டியில் பெற்றுக்கொண்ட பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் என்பவற்றை கல்லூரியின் அதிபர், பிரதி அதிபர் ஆகியோரினால் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>